இறுதி பந்து வரை சென்ற போட்டி…!! தோனி களத்தில் காட்டிய அதிரடி..!! அதிர்ச்சி தோல்வி..!! | csk vs rr 2023 at chepauk

இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அனல் பறந்தது, இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று போட்டி தோனியின் அதிரடி ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலடி என கலவரம் ஆன சேப்பாக்கம் மைதானம் குறித்த விபரங்களை காண்போம்.
ஐபிஎல் அரங்கில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தை பெற்றது, குறிப்பாக மிரட்டல் வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியில் ரன் ஒரு பக்கம் குவியத் தொடங்கின.
அதன்பின் களத்தில் அசத்திய சென்னை அணியின் பவுலர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி அசத்தினார்கள், இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் பதிவு செய்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரன்கள் பெற முதலில் தடுமாறினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கை சமாளித்த சிறப்பாக விளையாடிய டெவன் கான்வே அரைசதம் பதிவு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் பெற முடியாமல் மிகவும் தடுமாறினார்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சென்னை அணி வீரர்கள் ரன்கள் பெற முடியாமல் செய்தார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி நம்பிக்கையாக களத்தில் விளையாடி வந்த கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலர்களை நாலா பக்கமும் சிதறடித்த தோனி மற்றும் ஜடேஜா சிக்ஸர்களை பறக்க விட்டார்கள் அசத்தினார்கள். சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் எம் எஸ் தோனி அடித்த சிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கொண்டாடினார்கள். அடுத்து பரபரப்பாக சென்ற போட்டியில் இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது அப்போது தோனி சிக்ஸர் அடித்து வழக்கம் போல் வெற்றியை பெற்று தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வகையில் சிறந்த யார்க்கரை வெளிப்படுத்திய பவுலர் சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போது தான் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி சென்னை அணிக்காக தோனி கேப்டனாக செயல்பட்ட 200 வது போட்டியாகும், இதில் சொந்த கிரௌண்டில் சென்னை அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.