சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை அடைந்து அசத்தல்…!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!! | csk jadeja t20 record 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி விக்கெட்கள் பெற்று முக்கிய மைல்கல்லை அடைந்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் அரங்கில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரர்கள் விக்கெட்களை பெற்று ரன்கள் பெறுவதை கட்டுப்படுத்தினார்கள், குறிப்பாக சென்னை அணியின் அசத்தல் சுழல் பவுலிங் ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளை பெற்று அசத்தினார்.
இதன்மூலம் டி 20 கிரிக்கெட்டில் 296 போட்டிகளில் விளையாடி உள்ள ரவீந்திர ஜடேஜா 200 விக்கெட்களை 7.54 எகானமி ரேட்டில் பெற்று அசத்தியுள்ளார், அதாவது இந்த டி 20 தொடரில் இந்தியாவிற்காக 64 போட்டிகளில் விளையாடி உள்ள ஜடேஜா 51 விக்கெட்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டி 20 தொடரில் ஜடேஜா உடைய சிறந்த பவுலிங் ரெக்கார்ட் ஆக 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் வழங்கி 5 விக்கெட்டுகள் பெற்றுள்ளது பதிவாகி உள்ளது.
ஐபிஎல் அரங்கில் 214 போட்டிகளில் விளையாடி உள்ள ஜடேஜா 138 விக்கெட்களை பெற்றுள்ளார், குறிப்பாக ஐபிஎல் அரங்கில் அதிகமாக விக்கெட்கள் பெற்ற பவுலர்கள் தரவரிசையில் 11 இடத்தில் ஜடேஜா உள்ளார்,மேலும் டி 20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்களை பெரும் 9ஆவது இந்தியர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன் உடைய விக்கெட்டை கைப்பற்றிய போது ஜடேஜா இந்த மாபெரும் மைல்கல்லை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.