ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே கேப்டன் தோனி படைக்க உள்ள புதிய சாதனை..!! | csk dhoni upcoming records

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய மைல்கல்லை அடைந்து முன்னணி வீரர்கள் பட்டியலில் இணைய உள்ளார் .
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆண்டுகள் கழித்து களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி ஐபிஎல் அரங்கில் முக்கிய சாதனை படைக்க உள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி அசத்தியுள்ள தோனி 235 போட்டிகளில் விளையாடி 4992 ரன்கள் பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய போட்டியில் கேப்டன் எம் எஸ் தோனி இறுதியாக களமிறங்கி சிக்ஸர் மற்றும் பவுண்டரி உடன் 14*(7) ரன்கள் பதிவு செய்தார். இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி இன்னும் 8 ரன்கள் பதிவு செய்தால் ஐபிஎல் அரங்கில் 5000 ரன்கள் பதிவு செய்து முக்கிய சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் 5000 ரன்கள் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் மிரட்டல் வீரர் விராட் கோலி உள்ளார், இந்த சிறப்புமிகு பட்டியலில் 7 வது வீரராக எம் எஸ் தோனியும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வரும் 41 வயது மிக்க முன்னணி வீரர் எம் எஸ் தோனி உடைய சாதனை பட்டியலில் மேலும் சாதனை இது பதிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.