சேப்பாக்கத்தில் தல தோனி அதிரடி..!! மிரட்டல் சாதனை படைத்தார்.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி சிக்ஸர்கல் பதிவு செய்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தை மிரட்டினார், ரசிகர்கள் நீண்ட நாட்கள் பிறகு தோனியின் அதிரடியை கண்டு மகிழ்ந்தார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கி வரும் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணிக்காக அளித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடியது.
சென்னை அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸர் மழை பொழிந்து ரன்கள் குவித்தார்கள். இந்த போட்டியின் இறுதியில் களமிறங்கிய கேப்டன் எம்.எஸ் தோனி அதிரடியாக 2 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார், அந்த தருணத்தில் சேப்பாக்கமே அதிர்ந்தது என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி முக்கிய மைல்கல்லை அடைந்து அசத்தியுள்ளது, குறிப்பாக அந்த 2 சிக்ஸர்கள் உடன் தோனி ஐபிஎல் அரங்கில் 5000 ரன்கள் பதிவு செய்த 7 வது வீரர் என்ற முக்கிய சாதனையை படைத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.