சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி பகிர்ந்த முக்கிய பதிவு..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!! | csk dhoni about jaipur stadium 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி போட்டி முடிந்த பிறகு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் பற்றி பகிர்ந்த தகவல் ரசிகர்கள் இடையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஐபிஎல் அரங்கில் நேற்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், மீண்டும் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வது இடத்திற்கு சென்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த எம் எஸ் தோனி தோல்வி குறித்து பேசிய பிறகு, நிபுணர் ஜெய்ப்பூர் மைதானம் மஞ்சள் நிறத்தில் சென்னை ரசிகர்கள் மட்டும் முழுமையாக தெரியும் அளவிற்கு காட்சி அளிப்பதை பற்றி கேட்ட கேள்விக்கு போட்டி நடைபெற்ற சவாய் மான்சிங் மைதானத்தில் தனக்கு ஏற்பட்ட நினைவுகள் பற்றி பகிர்ந்தார்.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த வருடம் தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்வதாக சிரிப்புடன் கூறினார், பின்பு இந்திய அணிக்காக அறிமுகமான எம் எஸ் தோனி இந்த மைதானத்தில்தான் தனது முதல் ஒருநாள் சதம் பதிவானதாக கூறினார். மேலும் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழக்காமல் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம் தான் இந்திய அணியில் என்னுடைய இடம் உறுதியானது, எனவே இந்த மைதானத்தை நான் என்றும் மறக்கமாட்டேன் என்று கூறினார்.இதனை கேட்ட தோனியின் ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்து இணையத்தில் இந்த பதிவை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.