தனது ஓய்வு குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பதில்..!! சோகத்தில் ரசிகர்கள்..!! | csk dhoni about his farewell 2023

ஐபிஎல் 2023 அரங்கில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்து அரங்கை அதிர வைத்தது. இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தனது ஓய்வு குறித்து சூசகமாக கூறிய பதில் ரசிகர்கள் இடையில் சற்று சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னணி வீரர்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்து அரங்கத்தை அதிர வைத்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் பதிவு செய்து அசத்தியது.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பம் முதலே மிகவும் தடுமாறியது, சென்னை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி முடிவு பேட்டை பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி தனது அணியின் வெற்றியை பற்றி பேசினார், பிறகு கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்ட் ஆன ஈடன் கார்டன் மைதானத்தில் சென்னை அணியின் ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டு காட்சியளித்தார்கள் .
இதை பற்றி பேசிய தோனி ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை கூறினார், தனக்கு பிரிய விடை கொடுக்க ரசிகர்கள் அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை காணவும் குவிந்து வருகிறார்கள், ஈடன் கார்டனில் அடுத்த வருடம் அவர்கள் அனைவரும் கொல்கத்தா அணி ஜெர்சி உடன் காட்சி அளிப்பார்கள் என்று சூசகமாக தனது கடைசி தொடராக இது அமையும் என்பதை போல் கூறினார்.
இந்த பதிவை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த சோகத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.