தட்ரோம்.. தூக்கறோம்.. தயாரா இருங்க வீரர்களே.. சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளர் அதிரடி உத்தரவு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 03, 2023 & 11:15 [IST]

Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2022 ஐபிஎல்லில் படுதோல்வியடைந்து வெளியேறிய நிலையில், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முந்தைய ஆண்டு தோல்வியில் இருந்து மீண்டு வர, தங்கள் திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு வீரர்களைக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியதாக சிஎஸ்கே இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில், "நாம் நன்றாக விளையாட வேண்டும், மேலும் இந்த சீசனில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அணிக்கு மீண்டும் கற்றுக்கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வருடங்கள் நாம் வெளி இடங்களில் இருந்தோம், அதனால் நமது விளையாட்டு பாணி மாறிவிட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்கே 2021 இல் பட்டத்தை வென்ற பிறகு, 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்ற போட்டியில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு ஐபிஎல் இரண்டு ஆண்டுகளாக 'பயோ-பபிள்ஸ்' உள்ளே நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் பழைய முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மைதான முறையில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சீசனில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால், புதிய மைதான நிலைமைகளுக்கு வீரர்கள் விரைவாக சரிப்பட்டு வர வேண்டும் என்று ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறினார்.

ஐபிஎல் இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கேவின் கோட்டையான சேப்பாக்கிற்குத் திரும்புவதற்குத் தயாராக இருப்பதால், தனது சொந்த மைதானத்தில் உள்ள நன்மைகளை அதிகரிக்க தனது அணி சிறந்ததைச் செய்யும் என்று பிளெமிங் மேலும் கூறினார்.

சமீபத்தில் கொச்சியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டதன் மூலம் சிஎஸ்கே வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.