சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மிரட்டல் சாதனைகள் ஒரு பார்வை..!! | ms dhoni unique ipl records

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், இந்த தொடருக்கு முன்னோட்டமாக கடந்த ஐபிஎல் தொடர்களில் பதிவான முன்னணி வீரர்கள் சாதனைகள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரில் முக்கிய முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகள் படைத்து உள்ளார், மேலும் முக்கியமான தருணங்களில் தோல்வியில் இருந்த அணியை தனது மிரட்டல் ஆட்டத்தின் மூலம் வெற்றியை நோக்கி அழைத்து சென்றுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக விளங்கும் எம்.எஸ்.தோனி உடைய கேப்டன்சி பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது, பல தருணங்களில் தோல்வியை எதிர் நோக்கி சென்று கொண்டிருந்த போட்டிகளில் சிறப்பான கேப்டன்சி வெற்றி பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி படைத்துள்ள சிறந்த 3 சாதனைகளை காண்போம்,
1. அசத்தல் பேட்டிங் சாதனை
ஐபிஎல் தொடரில் சிறந்த பினிஷர் என்று கூறினால் அனைவரும் நியாபகம் வரும் பெயர் தான் எம்.எஸ்.தோனி, ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் நம்பர் 3 முதல் நம்பர் 7 வது இடம் வரை பேட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது போட்டியின் நிலைக்கு ஏற்றவாறு அனைத்து இடங்களில் பேட்டிங் செய்யும் திறன் கொண்ட வீரர் எம்.எஸ்.தோனி என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் 3 வது இடம் முதல் 7 வது இடம் வரை பேட்டிங் செய்ய களமிறங்கி அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமைக்குரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.தோனி என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஐபிஎல் தொடரில் தோனி 5 வெவ்வேறு இடங்களில் களமிறங்கி 50 ரன்களுக்கு மேல் பதிவு செய்த ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.20வது ஓவரில் மிரட்டல் சாதனை :
ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பல நேரங்களில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகள் பெற்று தந்துள்ளார், குறிப்பாக ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் தனித்துவமான சாதனையை எம்.எஸ்.தோனி படைத்துள்ளார்.
அதாவது ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் சிக்ஸர்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்று தருவதில் பேர் போனவர் தோனி என்று கூறினால் மிகையில்லை, மேலும் ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் 52 சிக்ஸர்கள் தோனி பதிவு செய்துள்ளார். இதன் மூலம் (20 வது )இறுதி ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
3. ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டன் :
ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு எம்.எஸ்.தோனி சாதனை படைத்துள்ளார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வரும் தோனி இதுவரை 210 போட்டிகளில் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட சாதனையாக பதிவாகி உள்ளது , அடுத்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 143 போட்டிகளில் கேப்டனாகவும், விராட் கோலி 140 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.