சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 வது போட்டி..!! எம் எஸ் தோனி சாதனை ..!! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!! | csk captain ms dhoni 200th match

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகவும் தூணாகவும் விளங்கி வருபவர் கேப்டன் எம் எஸ் தோனி தான் என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளார்கள், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி முக்கிய சாதனை படைக்க உள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியுள்ளது, இந்த வெற்றிக்கு பெருமைக்கும் முக்கிய காரணமாக விளங்கியவர் கேப்டன் எம் எஸ் தோனி தான் என்று கூறினால் மிகையில்லை. இந்த 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மிரட்டல் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி பங்கேற்க உள்ள போட்டி ஒரு சாதனை நிகழ்வாக அமையவுள்ளது. அதாவது இன்றைய போட்டியில் சென்னை அணிக்காக 200 போட்டியில் கேப்டனாக எம் எஸ் தோனி தலைமை தாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 199 போட்டிகளில் வழிநடத்தி உள்ள கேப்டன் எம் எஸ் தோனி 120 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார். அதாவது 60.30 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ள மிரட்டல் கேப்டனாக தோனி ஐபிஎல் அரங்கில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ள கேப்டன் எம் எஸ் தோனி உடைய இந்த சாதனை நிகழ்வை மிகவும் சிறப்பாக மாற்றும் வகையில் சென்னை அணி வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை பெறுவார்கள் என்று ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.