சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனியின் புதிய மிரட்டல் சாதனை..!! சேப்பாக்கத்தில் புதிய சரித்திரம்…!! | csk ms dhoni new milestone

இந்தியாவின் முக்கிய டி20 தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தயார் நிலையில் உள்ளார்கள். மேலும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி புதிய சாதனை படைக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் அசத்தல் அணியாக ஐபிஎல் 2023 தொடரில் வெற்றிகளை பெற்று வருகிறது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி நடை போட்டு அசத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் வெளிப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.இன்று எம் எஸ் தோனி 200 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பங்கேற்க உள்ள நிலையில், கட்டாயம் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று கேப்டன் தோனியின் கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கிய ரஹானே, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் மிரட்டல் பார்மில் உள்ளார்கள், அதே சமயத்தில் ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் சஞ்சு சாம்சன், ட்ரெண்ட் போல்ட் ஆகிய முன்னணி வீரர்கள் மிரட்டல் பார்மில் உள்ளதால் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாயகனாக விளங்கும் கேப்டன் எம் எஸ் தோனி 200 வது போட்டியில் சென்னை அணியை வழி நடத்தி முக்கிய மைல்கல்லை அடைந்து புதிய சரித்திரத்தை படைக்க உள்ளார். இந்த சரித்திர நிகழ்வை காண சென்னை அணி மற்றும் தோனியின் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.