சேப்பாக்கத்தில் சென்னை அணி மிரட்டல் பவுலிங்..!! ஹைதெராபாத் அணி சறுக்கல்..!! | csk bowling vs srh 2023

ஐபிஎல் 2023 அரங்கில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி சிதறடித்தார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ஹார்ரி புரூக் விக்கெட்டை சென்னை அணியின் இளம் பவுலர் ஆகாஷ் சிங் கைப்பற்றினார்.அதன்பின் சற்று அதிரடியை தொடங்கிய அபிஷேக் சர்மா விக்கெட்டை சென்னை அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர் ஜடேஜா கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி முன்னணி வீரர்கள் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். சென்னை அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஆல்ரவுண்டர் ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.அதே போல் ஹைதெராபாத் அணி சார்பில் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 34(26) ரன்கள் பதிவு செய்தார்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சேப்பாக்கத்தில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி ஹைதெராபாத் அணி ஆட்டத்திற்கு முடிவு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.