சென்னை மிரட்டல் பவுலிங்..!! பேட்டிங்கில் அசத்தி ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றுமா..?? | csk bowling vs rr 2023

ஐபிஎல் அரங்கில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சென்னை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் முதலில் திணறியது, அதன்பின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணி சிறந்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அளித்தது.
சேப்பாக்கத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பௌலிங் செய்ய முடிவெடுத்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் இளம் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10(8) ரன்கள் பதிவு செய்து துஷார் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை அளித்து 38(26) ரன்கள் பெற்று ஜடேஜா சுழலில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 0(2) ஜடேஜா சுழலில் சிக்கி டக் அவுட் வேகமாக பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணி சார்பில் பொறுப்புடன் விளையாடி வந்த அதிரடி வீரர் பட்லர் அரைசதம் பதிவு செய்தார்.
இதற்கு இடையில் ராஜஸ்தான் அணி சார்பில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்கல் பதிவு செய்த பிறகு 30(22) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 52(36) ரன்கள் பதிவு செய்த பிறகு மொயீன் அலி இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ராஜஸ்தான் அணி நல்ல இலக்கை அடையும் வகையில் களத்தில் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஷிம்ரோன் ஹெட்மையர் 30*(18) ரன்கள் பெற்று அசத்தினார். சென்னை அணி சார்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்க்கது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் பதிவு செய்தது, இந்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடைந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா..?? என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.