சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் புதிய இளம் பவுலர்..!! முகேஷ் சவுதரி விலகல் ..!!

ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து பவுலர் முகேஷ் சவுதரி காயம் காரணமாக தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதையடுத்து சென்னை அணியில் புதிய இளம் பவுலரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று முன்னணி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது, இந்த 2023 ஆம் தொடரில் ஆரம்பத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் வேகப்பந்து பவுலர் முகேஷ் சவுதரி காயம் காரணமாக தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். ஐபிஎல் 2022 ஆம் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய முகேஷ் சவுதரி சென்னை அணிக்காக விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் சென்னை அணியில் முகேஷ் சவுதரி இடத்தில் களமிறங்க இளம் இடது கை பவுலர் ஆகாஷ் சிங் அணி நிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்றிருந்தார், மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆகாஷ் சிங் 9 டி20 போட்டிகள், 9 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 5 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார், தற்போது சென்னை அணிக்காக அடிப்படை விலை 20 லட்சத்திற்கு ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி அஹமதாபாத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது