IND VS AUS TEST 2023 : 100-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா மோசமான சாதனை..!! இந்திய அணி தடுமாற்றம் .!! ரசிகர்கள் ஏமாற்றம்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய செதேஷ்வர் புஜாரா மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.ஆஸ்திரேலியா பௌலிங்கில் இந்திய அணியும் தடுமாறி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடியும் முன்னரே ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முதல் நாளை நிறைவு செய்தது.இந்நிலையில் 2 வது நாள் தொடக்கத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தார் கள்.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரர் செதேஷ்வர் புஜாராவின் 100 வது டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி அமைந்த நிலையில் பெரிய அளவில் ரன்கள் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னர் நாதன் லியோன் உடைய பவுலிங்கில் புஜாரா 0(7) டக் அவுட் ஆனார். மேலும் 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச அளவில் 100 வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் புஜாராவும் இணைந்தார். இந்த மோசமான சாதனை பட்டியலில் பட்டியலில் முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான்கள் திலீப் வெங்சர்க்கார், லான் பார்டர், மார்க் டெய்லர், ஸ்டீபன் பிளெமிங், அலஸ்டர் குக் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சார்பில் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் இடம்பெற்றுள்ள நிலையில், 2வது இந்திய வீரராக செதேஷ்வர் புஜாரா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் பதிவு செய்துள்ளார், மேலும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் தற்போது அக்சர் படேல் 39*(88) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 27*(47) ரன்கள் பெற்று களத்தில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது