IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் புஜாரா முதல் இந்திய வீரராக புதிய சாதனை படைக்க வாய்ப்பு..!! ஆர்வத்தில் ரசிகர்கள்..!!

பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 2வது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னணி வீரர் செதேஷ்வர் புஜாராவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ள நிலையில், இந்திய வீரர்கள் யாரும் இதுவரை படைக்காத புதிய சாதனை ஒன்றை புஜாரா படைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் செதேஷ்வர் புஜாரா தனது 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி, இந்த சாதனையை படைக்கும் 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.தற்போதைய நிலையில் இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலியை அடுத்து புஜாரா தான் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு இந்திய வீரர் யாரும் படைக்காத ஒரு புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.இதுவரை இந்திய அணிக்காக 12 வீரர்கள் 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார்கள், ஆனால் ஒருவர் கூட தங்களின் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் ஜாம்பவான் வி வி எஸ் லக்ஷ்மணன் தனது 100 வது டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் பெற்றது தான், இதுவரை 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள இந்திய வீரர்கள் சார்பில் பதிவான அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் பலர் அரைசதம் அடித்துள்ளார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (54) , ராகுல் டிராவிட் (52), கபில் தேவ் (55), ஹர்பஜன் சிங் (52) ஆகியோர் 100வது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்துள்ளனர், மேலும் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி தனது 100 வது டெஸ்ட் போட்டியில் 45 ரன்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யாரும் படைக்காத புதிய சாதனையை டெல்லி டெஸ்ட் போட்டியில் செதேஷ்வர் புஜாரா செய்வாரா..?? என்று இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.