விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கு சண்டை இல்லை..!! கங்குலி தான் பிரச்சனையே சேத்தன் சர்மாவின் அதிரடி ..!!

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக உள்ள சேத்தன் சர்மா இந்திய அணியில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கங்குலி இடையில் இருந்த பிரச்சனைகளை பற்றி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த முன்னணி வீரர் விராட் கோலி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்ட சம்பவம், அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, தற்போது இந்த சம்பவத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து திடுக்கிடும் தகவல்களை இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா வெளியிட்டுள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சி சேத்தன் சர்மாவுக்கு தெரியாமல் அவர் இந்திய அணி பற்றி பேசிய விஷயங்கள் மற்றும் முக்கிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றை ரெகார்ட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது, இதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெறாத நிலையில் அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது, எனவே 2021 ஆம் ஆண்டு பணிச்சுமை காரணமாக தனது டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருவேறு கேப்டன்கள் இருப்பது சரியில்லை என்பதால் ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ விலக்கியது, இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்த விராட் கோலி தன்னை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலக்க போவதாக பிசிசிஐ ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தான் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த பொழுது பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி அவரை தடுத்து இந்த முடிவை பற்றி சற்று யோசிக்கும் படி கூறினார் என்று வெளியான தகவல் பொய்யானது என்று கூறினார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி அந்த தருணத்தில் பெரிய சர்ச்சையாக உருவானது.
இந்நிலையில் இந்த அனைத்து சர்ச்சைகளையும் சேத்தன் சர்மா பேசிய வீடியோ பதிவுகள் மூலம் தெளிவாகி உள்ளது, அதில் பேசிய சேத்தன் சர்மா விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. கங்குலி மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையில் தான் காரசார பிரச்சனைகள் இருந்தது என்று கூறினார்.
பிசிசிஐ உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு விராட் கோலியை பிடிக்காது எனவே அவரது மோசமான பார்மை வைத்து ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவு அளிப்பதை போல் விராட் கோலியை புறம் தள்ளினார்கள் என்று கூறினார்.இந்த பதிவு இணையத்தில் பரவி வரும் நிலையில் பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.