ஐபிஎல் 2023 : சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!! ரஹானே, அம்பாதி ராயுடு பங்கேற்பு…!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் முன்னணி வீரர்கள் பங்கேற்புடன் பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டங்களை வென்று அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் முழுவீச்சில் செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று மிகவும் எதிர்பார்க்க படுகிறது.
இத்தகைய எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் கேப்டனாக விளங்கும் எம். எஸ்.தோனி நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு பின், இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பரவலாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதாவது தோனி கடந்த ஆண்டில் அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியாக சென்னையில் நடைபெறும் போட்டி தான் அமையும் என்று கூறினார்.
தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தங்கள் ஹோம் கிரௌண்டில் விளையாட உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் ஹோம் கிரவுண்ட் ஆன சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் சில போட்டிகளில் விளையாட உள்ளது, எனவே தோனி உடைய கடைசி ஐபிஎல் தொடராக இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடர் அமைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாகவும் அடையாளமாகவும் இத்தனை ஆண்டுகள் வழிநடத்திய கேப்டன் கூல் எம்.எஸ்.தோனியின் இறுதி தொடராக இந்த 2023 ஐபிஎல் தொடர் அமைந்தால், தோனியை சாம்பியன் பட்டத்துடன் வழி அனுப்ப அணி நிர்வாகமும் அணி வீரர்களும் உறுதியாக இருக்கிறார்கள், எனவே அதற்கான முழுவீச்சில் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று மிகவும் எதிர்பார்க்க படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக சென்னையில் முன்னணி வீரர்கள் ரஹானே, ராயுடு உள்ளிட்டோர் உட்பட வீரர்கள் பலரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது, இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.