ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்..?? புதிய வீரர் அறிவிப்பு..??

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதையடுத்து அணிகள் அனைத்தும் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள். இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் பலர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில் முக்கிய பவுலர் ஒருவரும் காயம் அடைத்து தொடரில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சென்னை அணியால் ஏலத்தில் 1 கோடி ரூபாவிற்கு எடுத்த நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் கடந்த ஆண்டு முதுகில் ஏற்பட்ட காயத்தினால் நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்தார், தற்போது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் விளையாட அணியில் சேர்க்கப்பட்ட ஜேமிசன் காயம் முழுமையாக குணம் ஆகாத நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறார் என்று தெரிய வந்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு கைல் ஜேமிசன் 3 - 4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, சென்னை அணிக்கு இது பெரிய இழப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேமிசனுக்கு பதிலாக சென்னை அணி புதிய பவுலர் ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவல் குறித்து விரைவில் சென்னை அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு வரும் மார்ச் 31 ஆம் தேதி பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.