கான்வே-யின் அதிரடி பேட்டிங்… மாஸ் காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..
![கான்வே-யின் அதிரடி பேட்டிங்… மாஸ் காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..](https://www.sportspartans.com/assets/uploads/news-2165.jpg)
இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள எடன் கார்டென்ஸில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது.
இதில் முதலில் களமிறங்கிய கான்வே மற்றும் ருத்துராஜ் பார்ட்னர்ஷிப் அதிரடியான ஆட்டத்தை ஆடினர். அதன் படி, இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை ஆடி, 73 ரன்கள் வரை ஆட்டமிழக்காமல் ஆடினர். அதன் பிறகு, சுயஷ் ஷர்மாவின் அதிரடி பௌலிங்கால், ருதுராஜ் 19-க்கு 35 என்ற கணக்கில் ஆட்டமிழந்தார்.
இவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே ஆட்டத்தைத் தொடர்ந்தார். மேலும், கான்வே தனது அதிரடி ஆட்டத்தால் 39 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.