ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பிளையிங் 11 குறித்து ஒரு பார்வை..!!

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நடைபெற உள்ள தொடருக்காக பல புதிய வீரர்களை ஏலத்தில் பெற்றுள்ள நிலையில் அணியின் சிறந்த பிளையிங் 11 குறித்து காண்போம்.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை சென்னை அணி சந்தித்த நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செயல்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், அஜின்க்யா ரஹானே போன்ற சில முக்கிய வீரர்களை சென்னை அணி வாங்கிய நிலையில், சென்னை அணி மிகவும் உறுதியாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பிளையிங் 11 (தோராயமான ) : டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், எம்.எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்யவர்தன் ஹங்கர் கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த முதல் போட்டியிலே கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியை தோற்கடித்து சென்னை வெற்றியுடன் பயணத்தை தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.