ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசத்தல் பிளேயிங் லெவன்..!! | csk team best playing 11 for ipl 2023

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 2023ம் ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பலப்பரிச்சை மேற்கொள்ள உள்ள நிலையில், தொடரில் பங்கேற்பதற்கான சென்னை அணியின் சிறந்த பிளேயிங் லெவன் குறித்து காண்போம்.
ஐபிஎல் தொடரில் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது தெளிவாக தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள வீரர்கள் வெற்றிக்கு மிகவும் உதவுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது, இதனை அடுத்து இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முழு வீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் இளம் மிரட்டல் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கி அதிரடி துவக்கத்தை அணிக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சென்னை கேப்டன் தோனி பினிஷிங் ரோலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அடுத்து பவுலர்கள் வரிசையில் வேகப்பந்து பவுலர்கள் தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே அணியில் இடம்பெற்ற நிலையில், ஸ்பின்னர்கள் பிரிவில் மஹேஷ் தீக்ஷனா மற்றும் மிட்செல் சான்ட்னர் யாராவது ஒருவர் அணியில் இடம் பெறுவர், பின்பு ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் மொயின் அலி ஸ்பின்னர்கள் இடத்தையும் நிரப்புவார்கள் என்பதால் மிகவும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷனாக இது தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, எம் எஸ் தோனி(கேப்டன், வி.கீ ) ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா/மிட்செல் சான்ட்னர்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 31 ஆம் தேதி கடந்த ஆண்டு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.