ராஞ்சியில் முதல் வெற்றியை பெறுமா இந்தியா.?? பாண்டியா அணியின் நிலவரம்..! எகிரும் எதிர்பார்ப்புகள்..!

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது, அதன்பின் ஹர்டிக் பாண்டிய தலைமையில் முதல் டி20 போட்டியில் ராஞ்சியில் நியூசிலாந்து அணியை சந்திக்க இருக்கும் இந்திய அணியின் நிலையை சற்று காண்போம்.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஆனா ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஓய்வில் இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆனா இந்திய டி20 அணி முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு களமிறங்க உள்ளது. நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும் அதிரடி ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியது என்பது உறுதி.
இந்நிலையில் டி20 போட்டியில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு முதல் டி20 போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்று தெரிய வருகிறது.
முதல் டி20 போட்டியில் டாஸ் வெல்லும் அணி பவுலிங் தான் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் போட்டியில் இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணி பனிப்பொழிவால் (டியூ பாக்டர்) சற்று திணறும் என்பதால் டாஸ் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது , இந்திய அணி ஒரு வேலை டாஸ் இழந்தால் அதற்கு ஏற்றார் போல் தயாராக இருக்க வேண்டும் என்பது உறுதி.
இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் சற்று ரன்கள் எடுக்க தடுமாறி வருகிறார், மேலும் அணியின் மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார், இந்நிலையில் அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அணிக்கு பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது
அடுத்து அணியின் மிடில் ஆர்டர் சூர்யா குமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றிருப்பதால் அணி சற்று பலமாக இருப்பதாக தோன்றினாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகா வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இளம் பௌலர்கள் உம்ரன் மாலிக் ,அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி ஆகியோர் எதிர் அணி வீரர்களை பதம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து, ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி அப்படியே தக்க வைப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் என்பதால் இந்த தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.