மீண்டும் சில நாட்கள் ஓய்வில் பும்ரா..! உலகக் கோப்பைக்கான பிசிசிஐயின் யுக்தி..???

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 10, 2023 & 15:05 [IST]

Share

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் ஜஸ்பிரிட் பும்ரா,காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓய்வில் இருக்கிறார்.அதன்பின் காயத்தில் இருந்து மீண்ட பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3-ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது,இது உலக கோப்பை தொடருக்கான பயிற்சியாக கருதி சிறப்பாக இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்று தெரிய வந்தது,இந்த அணியில் ஓய்விலிருந்த ஜஸ்பிரிட் பும்ரா இடம் பெற்றுள்ளார் என்று முன்னதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்பின் தொடருக்கு முன்னர் , சில முக்கிய காரணங்களாலும் பும்ரா இன்னும் சில தினங்கள் ஓய்வில் இருக்க தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவுறுத்தலின் பேரில் இலங்கை தொடரில் இருந்து பும்ரா விலகினார்.இதனை அடுத்து  வந்த செய்திகள் படி, பும்ராவிற்கு காயம் முழுமையாக குணமாகி களத்தில் பங்கேற்க சில நாட்கள் தேவைப்படுவதாக தெரிய வந்தது.

இந்நிலையில் பும்ரா அடுத்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர், அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2-டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை ஓய்வில் தான் இருப்பார் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவித்துள்ளது.

பும்ரா உலக கோப்பை தொடருக்கு முன்னர் முழு உடல் தகுதியுடன் அணிக்கு உதவும் வகையில் பும்ரா தயாராக இருக்க  தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  உள்ளது என்று தெரிய வந்துள்ளது.