IND VS AUS TEST 2023 : 3 வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெல்லும்..!! இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை..!!

பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி அடுத்து வரும் போட்டிகளில் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, அதனால் அடுத்து வரும் போட்டிகளில் எளிதாக வென்று விடலாம் என்று தப்பு கணக்கு போட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரெட் லீ பேசிய பதிவில் கூறியது, இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நாதன் லியோன் பார்முக்கு திரும்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் டாட் மர்பி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவர்கள் இருவரும் மீதம் உள்ள டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக இந்திய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறினார்.
இந்த தொடரில் மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று பிரெட் லீ நம்பிக்கை தெரிவித்துள்ளார், அதாவது இந்த தொடரில் முதல் பாதி தான் முடிந்துள்ளது இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா சிறந்த கம்பேக் கொடுக்கும் இந்திய கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் மார்ச் 1 ஆம் தேதி 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தோரில் விளையாட உள்ள நிலையில், இரு அணிகள் சார்பில் அசத்தல் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.