பிக்பாஷ் லீக் 2022-2023: ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்..! மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஹாட்ரிக் வெற்றி..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 21, 2022 & 18:15 [IST]

Share

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்நாட்டுத் தொடரான பிக்பாஷ் லீக்கின் இன்றைய 10-வது போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் சைமண்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் ஜிம்மி பீர்சன் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர்கள் மேக்ஸ் பிரையன்ட் மற்றும் காலின் மன்ரோ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

அதனை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வீரர்கள் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்கள். இறுதியாக பிரிஸ்பேன் ஹீட் அணி 20-ஓவர்கள் முடிவில் 137 ரன்களை பதிவு செய்தனர். அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஜிம்மி பீர்சன் 45*(30) ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் டாம் ரோஜர்ஸ் 4-விக்கெட்களையும், அகேல் ஹொசின் 3-விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

அதன்பின் களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தொடக்க வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்தாலும், அணியின் முன்னனி வீரர் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிதானமாக விளையாடினார். மறுபக்கம் அதிரடியாக விளையாடினார்  ஆண்ட்ரே ரஸ்ஸல். இருவரின் ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இறுதியாக 19.2-ஓவர்களில் 139 ரன்களை அடித்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் விதமாக விளையாடி 6-சிக்ஸர்கள்,2-பௌண்டரிகள் உட்பட 57(42) ரன்களை அடித்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டா. இந்த போட்டியின் வெற்றி மூலம்  தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.