பிக்பாஷ் லீக் 2022-2023: தனி ஒருவன் காலின் மன்ரோவின் அதிரடி வீண் ..! சிட்னி தண்டர் அணி வெற்றி ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 29, 2022 & 16:37 [IST]

Share

பிக்பாஷ் லீக்கின் 19-வது போட்டியில் சிட்னி தண்டர் மற்றும்  பிரிஸ்பேன் ஹீட் அணிகள் குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் விளையாடினார்கள்,இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற  பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் ஜிம்மி பீர்சன் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய  சிட்னி தண்டர் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 9 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்,அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ கில்க்ஸ் மற்றும் ரிலீ ரோசோவ் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை ஏற்றி அட்டமிழந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களால் பெரிய அளவில் ரன்கள் ஏதும் அடிக்காமல் விக்கெட்களை பறிகொடுத்தனர்,பின்பு இறுதியில் சற்று அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ரோஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் இருவராலும் 20-ஓவர்கள் முடிவில் 182 ரன்களை குவித்தது சிட்னி தண்டர் அணி.

பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் பாஸ்லி 4-விக்கெட்களை கைப்பற்றினார்.அடுத்தாக இரண்டாவது பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் பிரையன்ட் நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார்.

காலின் மன்ரோ ஒருமுனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருக்க அடுத்தது களமிறங்கிய வீரர்கள் அவருடன் கைகோர்க்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதிவரை தனி ஒருவனாக அசத்தலாக விளையாடிய காலின் மன்ரோ 98 (53) ரன்களை அடித்து ஆட்டத்தை முழுமையாக முடிக்காமல் அவுட் ஆனார்.அதனால் 20-ஓவர்கள் முடிவில் 11-ரன்கள் வித்தியாசத்தால் சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது.

சிட்னி தண்டர்  அணிக்கு உதவும் வகையில் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங்கில் 36(15) ரன்களையும் மற்றும் பௌலிங்கில் 2-விக்கெட்களையும் எடுத்த டேனியல் சாம்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.