பிக்பாஷ் லீக் 2022-2023: சிட்னி சிக்சர்ஸ் அணியின் மிரட்டல் பௌலிங்கில் சிதறியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 28, 2022 & 17:37 [IST]

Share

ஆஸ்திரேலியா நாட்டின் முக்கிய தொடர்களின் ஒன்றான பிக்பாஷ் லீக்கின் 18-போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்.முதலில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் நிக் மேடின்சன் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய  சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான குர்டிஸ் பேட்டர்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்,மறுபக்கம் மற்றோரு வீரர் ஜோஷ் பிலிப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதனை அடுத்து களமிறங்கிய வீரர்களும் உடனுக்குடன் தங்களின் விக்கெட்டை பறி கொடுத்தனர்.மேலும்  அணியின் மோயஸ் ஹென்ரிக்ஸ் ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆனார்,அதிகபட்சமாக இளம் வீரர் ஜோஷ் பிலிப் 55(40) ரன்களை அடித்தார்.

இந்நிலையில் 20-ஓவர் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 149 ரன்களை பதிவு செய்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் முஜீப் உர் ரஹ்மான் 3-விக்கெட்களை கைப்பற்றினர்.

அடுத்தாக 150-ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தொடக்க வீரர் குப்தில் டக் அவுட் ஆனார்,அணியின் கேப்டன் நிக் மேடின்சன் ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட் ஆனார்.

அதன் பின் நிதானமாக விளையாடிய அணியின் முன்னனி வீரர்கள் ஆரோன் பிஞ்ச்  மற்றும் ஷான் மார்ஷ்  அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தி தங்களின் விக்கெட்களை பறிகொடுத்தார்.

மேலும் அடுத்தாக பேட்டிங் செய்ய வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள்,இந்நிலையில் 34-ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.சிட்னி சிக்சர்ஸ் சார்பில் சிறப்பாக பந்து வீசி 4- விக்கெட்களை எடுத்த பென் துவர்ஷுயிஸ்  ஆட்டநாயகன் விருதை வென்றார்.