பிக்பாஷ் லீக் 2022-2023 : அலெக்ஸ் ரோஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அணி அசத்தல் வெற்றி ..!
![பிக்பாஷ் லீக் 2022-2023 : அலெக்ஸ் ரோஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அணி அசத்தல் வெற்றி ..!](https://www.sportspartans.com/assets/uploads/news-1512.jpg)
ஆஸ்திரேலியாவின் முக்கிய உள்நாட்டு தொடரான பிக்பாஷ் லீகின் 29-வது போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பெர்த் மைதானத்தில் மோதினார்கள்,இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் உடனுக்குடன் ஆட்டமிழந்தார்கள்,பிறகு களமிறங்கிய அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் அதிரடியாக விளையாடி 61(37) ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் 20-ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 142 ரன்களை பதிவு செய்தது,சிட்னி தண்டர் அணி சார்பில் அசத்தலாக பௌலிங் செய்த நாதன் மெக்ஆண்ட்ரூ 3-விக்கெட்களை கைப்பற்றினார்.அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி தண்டர் அணியின் வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரிலீ ரோசோவ் இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.
அணியின் பரிதாப நிலையை மற்றும் வகையில் தொடக்க வீரரான மேத்யூ கில்க்ஸ் அடுத்து களமிறங்கிய ஆலிவர் டேவிஸ் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடினார்,குறிப்பாக நிதானமாக விளையாடிய ஆலிவர் டேவிஸ் 58(47) ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ரோஸ் 3-சிக்ஸர்கள் மற்றும் 3-பௌண்டரிகள் உட்பட 41(18) ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதனால் 17 ஓவர்களில் சிட்னி தண்டர் அணி 143 ரன்களை எடுத்து மிரட்டல் வெற்றியை பெற்றது,அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் வகையில் அரைசதம் அடித்த ஆலிவர் டேவிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.