பிக்பாஷ் 2022-2023 : ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி அசத்தல் வெற்றி..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 06, 2023 & 17:45 [IST]

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் லீக்கின்  31-வது மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள்  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடினார்கள், இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன்  மோயஸ் ஹென்ரிக்ஸ் பௌலிங்கை தேர்வு செய்தார்.

இதனால் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜோ கிளார்க் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,நிதானமாக விளையாடிய தாமஸ் ரோஜர்ஸ் 48(33) ரன்களை அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் அனுபவ வீரர்கள் ஹில்டன் கார்ட்ரைட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை ஏற்றினார்கள்,இந்நிலையில் 20-ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 173 ரன்களை பதிவு செய்தது,அதிகபட்சமாக  ஸ்டோனிஸ் 7 பவுண்டரிகள் 2-சிக்ஸர்கள் உட்பட 52(28) ரன்களை அடித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான  ஜோஷ் பில்லிப் 10 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரரான ஜேம்ஸ் வின்ஸ் நிதானமாக விளையாடினார். 

அதன்பின் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் 9-பவுண்டரிகள் மற்றும் 2-சிக்ஸர்கள் உட்பட   91*(59) ரன்களை அடித்து விளாசினார்.

இறுதியாக 19.5 ஓவரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 176 ரன்களை அடித்து வெற்றி பெற்றது,அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.