பிக்பாஷ் லீக் 2022-2023 : இறுதி கட்டத்தை நெருக்கும் லீக் சுற்றுகள்..! அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள்…???

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 20, 2023 & 17:30 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு தொடர்களில் மிகவும் முக்கியமான தொடராக விளங்கும் பிக்பாஷ் டி20 லீக் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடியும் நிலையில் உள்ளது, இன்னும் ஒரு சில லீக் சுற்று போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்ல அணிகள் நடுவில் கடும் போட்டிகள் நிலவுகிறது.

இந்நிலையில் இன்று நடந்த 48வது போட்டியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில்  அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதினார்கள், இதில் சிறப்பாக விளையாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 92 ரன்களில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை ஆல் அவுட் செய்து ,அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த இலக்கை 11 ஓவர்களில் அடைந்து அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.இந்த தொடரில் இன்னும் 8 லீக் போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு எந்த 5 அணிகள் செல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.

இந்த புள்ளி பட்டியல் பார்க்கும் பொழுது தற்போதைய நிலைப்படி  20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்று தான் தெரிகிறது, அதே போல் 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் அடுத்த மூன்று இடங்களுக்கு தான் போட்டி நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த முறை எந்த அணி பிக்பாஷ் லீக்கின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை காண   ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.