பிக்பாஷ் லீக் 2022-2023: ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் ..! சிட்னி தண்டர் அணியின் தோல்வி..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 20, 2022 & 18:15 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக்கின் 12-சீசன் நடந்து வருகிறது,இதில் 9-வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடினார்கள்.

இந்நிலையில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணியின் கேப்டன் கிறிஸ் கிரீன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிட்னி தண்டர் அணி சார்பாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் 3(7) ரன்களில் ஆட்டமிழக்க,மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக விளையாடினர். அதன்பின் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில்,ஜோடி சேர்ந்த ஹேல்ஸ் மற்றும் ஆலிவர் டேவிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை சற்று உதவினார்கள்.

இறுதியாக சிட்னி தண்டர் அணி சார்பில் 20-ஓவர்கள் முடிவில் 150-ரன்கள் பதிவு செய்யப்பட்டது.அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ்  68(50) ரன்களை அடித்தார்.அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சார்பில் ஹென்றி தோர்ன்டன் மற்றும் கிராண்ட்ஹோம் தலா 2-விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

அதன்பின் 151-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்  அணியின் தொடக்க வீரர் ஜேக் வெதர்ரால்ட் 7(9) ரன்களில் ஆட்டமிழக்க,மறுமுனையில் நிதானமாக விளையாடிய மத்தேயு ஷார்ட் 68(44) ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.இந்நிலையில் 18.4 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்  அணி வெற்றி பெற்றது.மேலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மத்தேயு ஷார்ட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுத்  தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.