ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் தொடர் பாதியில் விலக வாய்ப்பு..?? காரணம் என்ன ..??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய உள்ள நிலையில், முக்கிய ஆல்ரவுண்டர் ஒருவரும் தொடர் பாதியில் அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதனை அடுத்து அனைத்து அணிகளும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள். ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏலத்தில் 1 கோடி வாங்கப்பட்ட வேகப்பந்து பவுலர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக தொடரில் இருந்து ஏற்கனவே விலகி உள்ள நிலையில், தற்போது ஏலத்தில் 16.25 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு சிறப்பான ஆல்ரவுண்டராக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரின் பாதியில் சென்னை அணியில் இருந்து விலகி விடுவார் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது வரும் ஜூன் மாதத்தில் ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக இங்கிலாந்து அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் என்ற முறையில்பென் ஸ்டோக்ஸ் அதில் பங்கேற்க சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று நடைபெறும் போது பென்ஸ்டோக்ஸ் அணியில் இருக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை ரசிகர்களுக்கு சோகமான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது, ஆனால் சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவது குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.