IND VS AUS TEST 2023 : துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் விலகல்..!! பிசிசிஐ அதிரடி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை பிசிசிஐ விலக்கி உள்ள தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் நடைபெற உள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியது, பிசிசிஐ சார்பில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி குறித்து அறிவிப்பு வெளியானது.
இந்திய அணி அணியின் தொடக்க வீரராக விளங்கும் கே.எல்.ராகுல் சமீப காலத்தில் தனது மோசமான பார்மில் உள்ளார், இதனால் இந்திய அணியில் ராகுலுக்கு தொடர்ந்து இடம் அளிக்கப்பட்டது பற்றி கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அதற்கு ஏற்றார் போல் கே.எல். ராகுல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெறும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ அறிவித்த நிலையில், அந்த அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்று உள்ளார் ஆனால் அவரின் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உள்ளிட்ட பலரும் கே.எல்.ராகுலுக்கு பதில் இந்திய அணியில் புதிய வீரர்களுக்கு இடம் அளிக்குமாறு இணையத்தில் கேள்விகள் எழுப்பி வருவதால் முதல் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார்,அதன்பின் இந்திய அணியின் துணை டெஸ்ட் கேப்டன் பதவியில் நீடித்து வந்த கே.எல்.ராகுல் தனது மோசமான பார்ம் காரணமாக அதை பறிகொடுத்துள்ளார் என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் பெறாமல் அவுட் ஆன கே.எல்.ராகுலை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரை போல் பலரும் மீதம் உள்ள போட்டிகளில் தனது பழைய பார்முக்கு திரும்பி தான் யார் என்பதை கே.எல்.ராகுல் கண்டிப்பாக நிரூபிப்பார் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.