IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம் மாற்றியமைப்பு..!! பிசிசிஐ அறிவிப்பு.!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்த பழைய மைதானத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மிகப்பெரிய அளவில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது, இந்த தொடரில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்த நிலையில் மீதம் இருக்கும் போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில் அங்கிருந்து இண்டோர் உள்ள மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
தர்மசாலா மைதானத்தில் சில புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அது முழுமையாக முடிவு பெறாததால் தற்போதைய நிலையில் சர்வதேச போட்டிகள் நடத்த தகுதியான மைதானமாக இல்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் தர்மசாலாவில் கடுமையான குளிர்காலம் காரணமாக அவுட் பீல்டில் போதுமான புல் அடர்த்தி இல்லை, அவை முழுமையாக வளர சிறிது காலம் ஆகும் என்பதால் இங்கு நடைபெற இருந்த 3 வது டெஸ்ட் போட்டி இண்டோரில் நடைபெற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.
இதுவரை இந்தோரில் 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன, குறிப்பாக 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்போது ஆஸ்திரேலியா தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல் மார்ச் 5 வரை இந்தோரில் நடைபெற உள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெற உள்ளது, எனவே இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.