புதிய மாற்றத்துடன் தொடங்கும் மகளிர் ஐபிஎல் தொடர் …! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

இந்திய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகமான பிசிசிஐ மகளிருக்கான ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு முதல் முறையாக நடத்த உள்ளது, இந்த மகளிர் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் இருக்கும் முக்கிய விதியை மாற்றி புதிய விதி ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன,மேலும் இந்த தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை வையாகாம் 18 நிறுவனம் ஒப்பந்தத்தில் 951 கோடிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.
மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் குறித்த விவரங்களை அந்த அணிகளை வாங்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களையும் வரும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் பிசிசிஐ அறிவிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புது விதமாக ஐந்து வெளிநாட்டு வீரர்கள் ஒரு அணியில் இடம்பெறலாம் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது, அந்த ஐந்து வீரர்களில் ஒரு வீரர் இணை நாட்டை சேர்ந்த வீரராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.அதன்படி ஒரு அணியின் பிளேயிங் லெவனில் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதுவரை நடந்து வந்த ஆண்கள் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பிளேயிங் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாட தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, எனவே மகளிர் ஐபிஎல் தொடரில் இந்த புதிய முறை நடைமுறைக்கு வர உள்ளது.இந்நிலையில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் சம்பளத்தையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ நிர்வாகம் இந்த முதல் வருட தொடக்கத்தில் 12 கோடி ரூபாவை பிளேயர் அதிகபட்ச சம்பளமாக முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டுகளில் 1.5 கோடி ரூபாய் அதிகரிக்கும் வகையில் இறுதியாக 5வது ஆண்டில் 18 கோடியாக உள்ள வகையில் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மகளிர் ஐபிஎல் தொடர் குறித்த அனைத்து விவரங்களையும் முழுமையாக வரும் நாட்களில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மகளிர் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.