ENG Vs BAN 1st Innings: வங்கதேசம் அணிக்கு 365 ரன்கள் இலக்கு

இன்று இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே மதியம் 10.30 மணிக்கு 7வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி பேட்டிங்
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 17வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் (52) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்க இங்கிலாந்து ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது ஜானி டேவிட் மாலன்(140) (37.2 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஜோ ரூட் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். டேவிட் மாலன் தொடர்ந்து ஜோஸ் பட்லர் (20), ஹாரி புரூக் (20), ஜோ ரூட் (82), லியாம் லிவிங்ஸ்டன் (0), சாம் கர்ரன் (11), கிறிஸ் வோக்ஸ் (14) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ரீஸ் டோப்லி (1) , மார்க் வூட்(6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 364 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகேதி ஹசன் (4), ஷோரிஃபுல் இஸ்லாம் (3), தஸ்கின் அகமது(1), ஷகிப் அல் ஹசன்(1) விக்கெட்ட்டுகள் எடுத்தனர்.