ஆட்டம்னா இது தான் ஆட்டம்.. 6 பந்துகளில் 5 விக்கெட்டுகள்.. டி20 வரலாற்றில் வேற லெவல் சாதனை!!

மலேசியாவின் பாங்கியில் நடந்த நாற்கர இருபது 20 தொடரில் பஹ்ரைன் சிங்கப்பூரை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், பஹ்ரைனின் ரிஸ்வான் பட் தனது அசாத்தியமான பந்துவீச்சு மூலம் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ரிஸ்வான் 3.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிங்கப்பூரை 168 ரன்களுக்குச் சுருட்டினார். பதிலுக்கு பஹ்ரைன் 6 விக்கெட்டுகள் மற்றும் 2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ரிஸ்வான் தனது 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் சாதனையையும் படைத்தார். சிங்கப்பூருக்கு எதிராக 18வது ஓவரை வீசிய ரிஸ்வான், அதில் 3, 4 மற்றும் ஆறாவது பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அடுத்து 20வது ஓவரை வீசியபோது, அதில் முதல் 2 பந்துகளிலும் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் 17.6, 19.1 மற்றும் 19.2 என தொடர்ச்சியாக தான் வீசிய 3 பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் டி20 வரலாற்றில் முதல் முறையாக 6 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்றுச் சாதனையும் செய்தார்.
மேலும் கடைசி ஓவரை ரிஸ்வான் வீசியபோது, அதில் 3வது மற்றும் 5வது பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், அந்த விக்கெட்டுகள் ரன்னவுட் முறையில் எடுக்கப்பட்டதால், ரிஸ்வான் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை.