டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு..!! பாபர் ஆசாம் அசத்தல் ..!!

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பெஷாவர் சல்மி அணியின் கேப்டனாக விளங்கும் பாபர் ஆசாம், இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயில் உடைய முக்கிய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்திய பிரீமியர் லீக் தொடர் போல் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்று வரும் டி20 பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணி தோற்கடித்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது பாபர் ஆசாம் உடைய அசத்தல் ஆட்டம் தான் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் முக்கியமான தருணத்தில் சிறப்பாக விளையாடிய பாபர் 64(39) ரன்கள் பெற்றார், இதன் மூலம் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மற்றொரு முக்கிய சாதனையை பதிவு செய்து அசத்தியுள்ளார், அதாவது டி20 தொடரில் வேகமாக 9000 ரன்கள் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பாபர் ஆசாம் டி20 கிரிக்கெட்டில் வேகமாக 9000 ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார், அதாவது 245 இன்னிங்ஸில் 9000 ரன்கள் பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 249 இன்னிங்ஸில் செய்த சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி 271 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்து 3 வது இடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து அசத்தும் முன்னணி வீரர்களில் முக்கிய வீரராக பாபர் ஆசாம் உள்ளார், மேலும் வரும் ஆண்டுகளில் பல வீரர்கள் சாதனைகளை முறியடித்து வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.