IND VS AUS TEST 2023 : டெஸ்ட் அரங்கில் பும்ரா சாதனையை முறியடித்த அக்சர் படேல்..!! | axar patel broke jasprit bumrah record

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார், மேலும் 4வது டெஸ்ட் போட்டியில் முன்னணி பவுலர் பும்ரா சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் 90(163) உடைய விக்கெட்டை கைப்பற்றிய போது அக்சர் படேல் டெஸ்ட் அரங்கில் வேகமாக 50 விக்கெட்டுகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதாவது இதற்கு முன் வேகமாக டெஸ்ட் அரங்கில் 50 விக்கெட்டுகள் பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா 2465 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 50 விக்கெட்டுகள் பெற்று முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது அக்சர் படேல் 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகளை டெஸ்ட் அரங்கில் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை தொடரை கைப்பற்ற பெரிதும் உதவினார். இந்த தொடரில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் அக்சர் படேல் 264 ரன்கள் பெற்று 3 வது இடம் பிடித்துள்ளார்,மேலும் இந்திய அணி சார்பில் விராட் கோலி 297 ரன்களுடன் முதல் இடத்தில் அக்சர் படேல் 2வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் முக்கிய ஆல்ரவுண்டர் இடத்தை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அக்சர் படேல் பெற்றுள்ளார் என்று இந்திய அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் இணையத்தில் பதிவிட்டு அக்சார் படேலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.