தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
![தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி](https://www.sportspartans.com/assets/uploads/news-2410.jpg)
இன்று பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு `10வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதல் இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. எனவே, ஆஸ்திரேலியா 312 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
ஆஸ்திரேலியா அணி பேட்டிங்
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 5வது ஓவரில் மிட்செல் மார்ஷ் (7) ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க ஆஸ்திரேலியா அணி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் டேவிட் வார்னர் (13) 6வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் (19), ஜோஷ் இங்கிலிஸ் (5), கிளென் மேக்ஸ்வெல், (3), மார்கஸ் ஸ்டோனிஸ் (5) ரன்களில் ஆட்டமிழந்தனர். 17 ஓவர் தொடக்கத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்தனர். பிறகு நசும் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இருவரும் பேட்டிங்கை தொடர்ந்தனர். ஆயினும் 33வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் (21) ஆட்டமிழந்தார். போட்டியின் இறுதி கட்டத்தில் மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் பாட் கம்மின்ஸ் அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில் மார்னஸ் லாபுஷாக்னே (46), பாட் கம்மின்ஸ்(22), ஜோஷ் ஹேசில்வுட் (2) ஆட்டமிழந்து, ஆடம் ஜம்பா (11) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணியை தங்களின் பந்து வீச்சால் மிரள வைத்தனர் தென் ஆப்பிரிக்கா அணியினர். ககிசோ ரபாடா (3), மார்கோ ஜான்சன் (2), கேசவ் மகாராஜ் (2) ), தப்ரைஸ் ஷம்சி (2), லுங்கி என்கிடி (1) விக்கெட்டுகள் எடுத்து அணியை வெற்றியடைய செய்தனர்.