AUS Vs SA 1st Innings: ஆஸ்திரேலியா அணிக்கு 312 ரன்கள் இலக்கு

இன்று பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு `10வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 19வது ஓவரில் டெம்பா பவுமா (35) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க தென்னாப்பிரிக்கா ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது ராஸ்ஸி வான் டெர் டுசென் (26) (28 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஐடன் மார்க்ராம் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். ராஸ்ஸி வான் டெர் டுசென் தொடர்ந்து குயின்டன் டி காக் (109), ஐடன் மார்க்ராம் (56), ஹென்ரிச் கிளாசென் (29), டேவிட் மில்லர் (17), மார்கோ ஜான்சன் (26) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ககிசோ ரபாடா (0) , கேசவ் மகாராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் (2), கிளென் மேக்ஸ்வெல் (2), ஜோஷ் ஹேசில்வுட் (1), பாட் கம்மின்ஸ் (1) ), ஆடம் ஜம்பா (1) விக்கெட்ட்டுகள் எடுத்தனர்.