இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வெளியானது..! ஸ்டார்க், கிரீன் பங்கேற்பில் சிக்கல் ..???

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 11, 2023 & 15:26 [IST]

Share

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க உள்ள நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது, இந்திய மண்ணில் நடக்க உள்ள இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா அணியில் நான்கு ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி  பிப்ரவரி- மார்ச் மாதம் வரை 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது,இதில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளின் முடிவு களை பொறுத்து  தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கு செல்லுமா..? இல்லையா..? என்பது உறுதியாகும்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பயணிக்கும் 18 நபர்கள் கொண்ட தனது டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது, இதில் இடம்பெற்றுள்ள அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா மண்ணில் நடத்த  டெஸ்ட் போட்டியில் காயமடைந்து குணமாகி வருவதால்   இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தாக அணியின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தனது விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி வருவதால் அவர் எந்த போட்டியில் பங்கேற்பார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை,மேலும் இந்த தொடரில் நான்கு ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர் குறிப்பாக 22 வயது இளம் ஸ்பின்னர் டாட் மர்பி தனது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்க அணியில்  இணைந்துள்ளார்.   

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான  டெஸ்ட் தொடரில்  இந்திய அணி  கண்டிப்பாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது தற்போதைய கணிப்புகள் மூலம் அறியப்படும் செய்தி, மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிக வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா அணி  முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா , ஸ்டீவ் ஸ்மித் (து.கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.