IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தல்..!! இந்திய அணி படுதோல்வி..!! ரசிகர்கள் ஏமாற்றம்..!!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது, இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் கனவு நிலுவையில் உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் மோதி வரும் நிலையில், இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்று அனைவரும் எதிர்பார்த்த கனவை ஆஸ்திரேலியா அணி முறியடித்துள்ளது.
இந்த 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை அளித்தது, அதன்பின் பவுலிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 163 ரன்களுக்கு வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்தது.இந்நிலையில் 2 வது பேட்டிங் செய்த இந்திய அணியின் முன்னணி வீரர்களை தனது ஸ்பின் பவுலிங் திணறடித்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லியோன் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார்.
அதாவது இந்திய அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் நிதானமாக பொறுப்புடன் விளையாடிய அனுபவ வீரர் செதேஷ்வர் புஜாரா 59 (142) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி வெறும் 163 ரன்கள் பெற்று 75 ரன்கள் முன்னிலை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் 3வது நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் டிராவிஸ் ஹெட் 49*(53) மற்றும் ஸ்மித் 28*(58) மிக விரைவாக இலக்கை அடைந்து ஆஸ்திரேலியா அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தனர்.இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 3 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் தனது முதல் வெற்றியை மிரட்டல் விதத்தில் பதிவு செய்து இந்திய அணிக்கு தனது நிலையை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.