IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் வெற்றிக்கு பிறகு தொடரை விரைவில் சமன் செய்வோம் என ஸ்மித் அதிரடி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்த பிறகு பேட்டியளித்த அணியின் தற்காலிக கேப்டன் வெற்றி ஸ்டீவன் ஸ்மித் முதல் வெற்றி குறித்தும், அடுத்த டெஸ்ட் போட்டி குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக 2023 பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா அணி பதிவு செய்து, இந்த தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி, 3 வது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.
இந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், ஜோஷ் ஹேஸில்வுட் உள்ளிட்டோர் விலகிய நிலையில் அணியை வழி நடத்திய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்மித் சிறப்பான கேப்டன்சி மூலம் அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தார். இந்த வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த ஸ்மித் இந்தியாவின் ஆடுகளங்கள் குறித்து எனக்கு நன்கு தெரியும், ஒரு கேப்டனாக தனது பணியை சிறப்பாக செய்ததாக உணர்கிறேன் என்று கூறினார்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்கள், குறிப்பாக அணியின் முன்னணி ஸ்பின்னர் நாதன் லியோன் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தினர் என்று ஸ்மித் கூறினார்.மேலும் அடுத்து நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டியில் இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்ய முயற்சிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி 3 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.