IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் புதிய வீரர் சேர்ப்பு.!! அதிரடி மாற்றத்திற்கு வாய்ப்பு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி புதிய வீரரை அணியின் இணைத்துள்ளது. மேலும் ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் முன்னிலையில் உள்ளது, எனவே உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது, குறிப்பாக ஆஸ்திரேலியா அணியில் புதிய இடது கை ஸ்பின்னர் மேத்யூ குஹ்னெமனை சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு குழந்தை பிறந்துள்ளது, எனவே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்வெப்சன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் மேத்யூ குஹ்னெமன் அணியில் இணைய உள்ளார் குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் இடது கை ஸ்பின்னர் ஜடேஜா விக்கெட்டுகளை பெற்று அசத்திய நிலையில், ஆஸ்திரேலியா அணியில் சார்பில் முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடது கை ஸ்பின்னர் இடம் பெறாமல் இருந்தது பெரிய இழப்பாக இருந்தது, அது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட இளம் வீரர் மேத்யூ குஹ்னெமனை 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அனுபவ இடது கை ஸ்பின்னர் ஆஷ்டன் அகர் இடம் பெற்றிருந்தாலும் இந்திய அணி இதுவரை ஒரு முறைக்கூட களத்தில் சந்திக்காத புதிய வீரரை களமிறக்கி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் இடது கை தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதல் டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் , சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் 2வது டெஸ்டில் வார்னருக்குப் பதில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் விதத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, எனவே அடுத்த போட்டியில் இரு அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.