IND VS AUS TEST 2023 : ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி வெளியானது..!! மார்ஷ், மேக்ஸ்வெல் சேர்ப்பு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்கள். அதை அடுத்து இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், ஒருநாள் தொடருக்கான ஆஸ்த்ரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது இதில் காயத்தினால் விலகி இருந்த முன்னணி வீரர்கள் பலரும் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் முன்னதாக அனைத்து அணிகளும் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் தொடருக்கு அடுத்து ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது.இந்த தொடருக்கான ஒருநாள் அணியை இந்திய அணி ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியும் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் காயம் காரணமாக விலகி இருந்த முன்னணி வீரர்கள் இணைந்து உள்ளார்கள், குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிச்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் இருந்து காயம் காரணமாக விலகிய டேவிட் வார்னர் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார், மேலும் அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் ஹேசல்வுட் காயம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜே ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் விவரம்:
தேதி |
போட்டி |
இடம் |
மார்ச் 17 2023 |
முதல் ஒரு நாள் |
மும்பை |
மார்ச் 19 2023 |
இரண்டாவது ஒருநாள் |
விசாகப்பட்டினம் |
மார்ச் 22 2023 |
மூன்றாவது ஒருநாள் |
சென்னை |
உலக கோப்பை தொடருக்கு முன் நடைபெறும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் முக்கியம் என்பதால் அனைத்து அணிகளும் முழுவீச்சில் ஒருநாள் போட்டிகளில் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் அதிரடிகள் அரங்கேறும் என்பது உறுதி.
ஆஸ்திரேலியா ஒருநாள் அணி : பேட் கம்மின்ஸ் (கேப்டன் ), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ ), ஜோஷ் இங்கிலீஷ் (வி.கீ ), மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, கேமரூன் கிரீன் , ஆஷ்டன் அகர், சீன் அபோட்.
இந்திய ஒருநாள் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வி. கீ ), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.