தாலிபான்கள் செய்த காரியத்தால்…! ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் எதிரான ஒருநாள் தொடர் ரத்து..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 12, 2023 & 14:48 [IST]

Share

இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பையை நோக்கி அனைத்து அணிகளும் தயாராகும் விதமாக அதிகமாக ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறார்கள், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான்  அணிக்கு எதிராக பங்கேற்க இருந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மார்ச் மாதத்தில் ஐக்கிய அரபு நாடுகள் உள்ள மைதானத்தில் விளையாட இருந்தது, இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்காது என்று அறிவித்தது.

ஆஸ்திரேலியா சார்பில் இந்த செயலுக்கு காரணமாக கூறப்பட்டது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு உள்ள பெண்கள் மேல் கடுமையான சட்ட்டங்களை விதித்துள்ளனர்,குறிப்பாக அங்கு உள்ள பெண்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், முக்கியமாக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதனால் அங்குள்ள பெண்களின் சுதந்திரம் பறிபோனது மேலும் பெண்களின் வளர்ச்சி தடை பெற்றுள்ளது,ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை தங்கள் நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பெண்களின் சுதந்திரத்திற்கு துணை நிற்கும் என்பது உறுதி,இதனை வலியுறுத்தி ஆப்கானிஸ்தான் எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் கைப்பற்றினார்கள், அதன்பின் அங்கு பெண்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகிறது, ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியில்  பல தடைகளை  தலிபான்கள் விதித்துள்ளார், குறிப்பாக சர்வேதச கிரிக்கெட்டில் அண்டர்-19 பெண்கள் அணி இல்லாத ஒரே நாடு ஆப்கானிஸ்தான் தான்.இதனை சுட்டி காட்டி அவர்களின் தவறை உணர்த்த தான் ஆஸ்திரேலியா இந்த நிகழ்வை அரங்கேற்றியுள்ளது.