ஆசிய கோப்பை 2023 : இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில்..! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 05, 2023 & 15:21 [IST]

Share

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா 2023 மற்றும் 2024   ஆண்டுகளுக்கான தொடர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டார்,அதில் இந்த 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பிசிசிஐயின் செயலாளர் மற்றும்  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளதால் இரு நாடுகளுக்கும் நடுவில் இருக்கும் அரசியல் மற்றும் பல அதிருப்தி காரணங்களால் இரண்டு நாட்டிற்கும் பொதுவான இடத்தில் ஆசிய கோப்பையை நடத்த வேண்டும் என்று பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடர் டி-20 மாதிரி  போட்டியாக நடைபெற்றது, அதில் இறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் 50-ஓவர் கொண்ட போட்டியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில்  6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடும் ,இதில் முதல் பிரிவில் இந்தியா ,பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி இடம்பெறும் ,அடுத்ததாக இரண்டாவது பிரிவில் வங்கதேசம்,இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 13 போட்டிகளில் நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் சென்று கலந்து கொள்ளாது என்று தெரிவித்துள்ள  நிலையில்,தொடர் வேறு இடத்திற்கு மாற்ற பட்டு நடைபெறுமா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து காண்போம்.