IND VS AUS TEST 2023 : அணில் கும்ப்ளே உடைய பல வருட சாதனை முறியடித்தார் அஸ்வின்..! ரசிகர்கள் பாராட்டு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பவுலர் அஸ்வின் அணில் கும்ப்ளே உடைய 18 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது, குறிப்பாக அஸ்வின் தனது அசத்தல் பவுலிங் மூலம் 3 விக்கெட்டுகளை பெற்று அணிக்கு மிகவும் உதவினார்.இந்த போட்டியில் தனது சுழலில் அசத்திய அஸ்வின் இந்திய அணியின் ஜாம்பவான் அணில் கும்ப்ளே உடைய நீண்ட நாள் சாதனை முறியடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி உடைய விக்கெட்டை கைப்பற்றிய போது சர்வதேச டெஸ்ட் தொடரில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றினர், வெறும் 89 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை அடைந்துள்ள நிலையில் குறைவான இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்னர் 93 போட்டிகளில் அணில் கும்ப்ளே 450 விக்கெட்களை பெற்றது தான் சாதனையாக முதல் இடத்தில்
இருந்த நிலையில் அஸ்வின் அதை முறியடித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் முத்தையா முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனை தான் முதலிடத்தில் உள்ளது, அதன் பின் இரண்டாவது இடத்தில் அஸ்வின் 89 இன்னிங்ஸில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றியது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பௌலிங் செய்த அஸ்வின் 15.5 ஓவர்களில் 42 ரன்கள் அளித்து 3 விக்கெட்டுகளை பெற்று அசத்தியுள்ளார், இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற தொடர்ந்து அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்து உதவுவார் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.