IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்..!! ஷமி அசத்தல்..!! அஸ்வின், ஜடேஜா புதிய சாதனை.!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடியும் முன்னரே ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது, இந்திய அணிக்காக சிறப்பாக பௌலிங் செய்த அஸ்வின் மற்றும் ஜடேஜா புதிய மைல்கல்லை அடைந்தார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் உடனுக்குடன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அணியின் தொடக்க வீரர் கவாஜா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 81(125) ரன்கள் பெற்று தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அணியின் ஸ்கோரை ஏற்றும் வகையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72*(142) ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில் 263 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அதேபோல் சுழலில் அசத்திய அஸ்வின் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்மித் உடைய விக்கெட்டை ஒரே ஓவரில் கைப்பற்றினார், அடுத்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உடைய விக்கெட் பெற்ற பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை பெற்ற 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்களை பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் முடிவதற்குள் கபில் தேவ் உடைய சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஆனால் தனது முதல் விக்கெட்டாக உஸ்மான் கவாஜா விக்கெட்டை பெற்ற பொழுது சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் வேகமாக (62 போட்டிகளில்) 250 விக்கெட்டுகள் மற்றும் 2500 ரன்கள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 13*(34) ரன்களிலும் கே.எல்.ராகுல் 4*(20) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில் 21 ரன்களை இந்திய அணி பதிவு செய்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.